மோகோசந்த்

பிரதம்ர் மோடி நாகா அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண எதுவும் செய்யவில்லை என ராகுல் காந்தி  உரையாற்றி  உள்ளார்.

கடந்த  2015 ஆம் அண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுடன் அமைதி ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டது.

பிறகு 2017-ல் அரசியல் குழுக்களுடன் உடன்பட்ட நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.  அயினும், நாகாக்களுக்கு தனிக் கொடி மற்றும் அரசியலமைப்பு கோரிக்கையில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் பிடிவாதமாக இருப்பதால் இறுதித் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை.

தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார் அவர் நாகாலாந்தின் மோகோசந்த் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்-

தனது உரையில்,

”நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, 2015-ல் ஒப்பந்தம் போட்டபிறகு, பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. நாகா மக்களின் நம்பிக்கை இல்லாமல், அவர்களுடன் கலந்து பேசாமல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. 

பிரதமரே உங்களிடம் தீர்வு இல்லை என்றால், தீர்வு இருக்கிறது என்று பொய் சொல்லக்கூடாது. தீர்வு காண்பதற்கான பணிகளை நாம் செய்ய வேண்டும், தீர்வு கிடைப்பதற்காகப் பணி செய்வோம் என்று கூறலாம். ஆனால் நாகா மக்களிடம் பொய் சொல்லக்கூடாது. 9 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் கூறியது நாகா மக்களுக்கான வெற்று வாக்குறுதி”. 

என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.