டில்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளத்தில்,
”முந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தில் வேகத் தடையாகப் பிரதமர் மோடி வந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் உலகிலேயே 3-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்தது.
பிரதமர் மோடி தமக்கு வேண்டப்பட்ட ஒரு சில நண்பர்களின் ஆதாயத்திற்காக நாட்டையே வெறுமையாக்கிக் கொண்டிருக்கிறார்.
பொருளாதார முன்னேற்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு அருகில் கூட பா.ஜ.க. அரசு எப்போதும் வரமுடியாது”
என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel