ஜெய்ப்பூர்

சீன நாட்டுடனான எல்லை பிரச்சினைக்காக மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது   கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கட்சியின் கொள்கைகளை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.   இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.

ராகுல் காந்தி தனது உரையில்” சீன அரசு இந்தியப் பகுதியில் உள்ள நிலங்களை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவர் அப்போதே தனது பதவியை ராஜினாமா செய்திருப்பார்.   அதைப் போல் மோடியும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியோ இதுவரை இந்த விஷயத்தில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கிறார்.  நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் உள்ள போது ஆர்எஸ்எஸ் அமைப்பு வெறுப்பைப் பரப்பி வருகிறது. அதற்கு நாம் அன்பின் வழியில் எதிர்வினை ஆற்ற வேண்டும்” எனக் கூறி உள்ளார்.