டில்லி :

கில இந்திய காங்கிரஸ் கட்சியின்  தலைவராக ராகுல் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார்.

கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் சோனியாவின் உடல் நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதால், அவரால் கட்சி பணியாற்ற முடியவில்லை. இதன் காரணமாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி கட்சியின் மூத்த தலைவர்களுக்கு சோனியா வேண்டுகோள்விடுத்தார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை தெர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட ராகுல் போட்டியின்றி  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இன்று அவர் தலைவராக பொறுப்பேற்றார்.

ராகுல் பொறுப்பேற்பதை தொடர்ந்து இன்று காலை முதலே காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தை சூழத் தொடங்கினர். ராகுல் வாழ்க என அவர்கள்  உற்சாகமாக கோஷமிட்டனர். ராகுல் பதவி ஏற்றதை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இன்று நடைபெற்ற விழாவில் ராகுல்காந்தி முறைப்படி காங்., கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரிடம் காங்கிரஸ் தேர்வு பிரிவு செயலாளர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ராகுல்   தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை  வழங்கினார்.

இந்த விழாவில், முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட  மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள்,  கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராகுல் பதவி ஏற்றதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

தொண்டர்களின் உற்சாக வீடியோ

 

[embedyt] https://www.youtube.com/watch?v=ALHtYi-XIJ8[/embedyt]