நாக்பூர்:

காராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்த ஊழல் மீது விசாரணை நடைபெறும் என்றும், அந்த விசாரணையை தொடர்ந்து, சவுகிதார் மோடிக்கு சிறையும் கிடைக்கும், இது உறுதி என்று  கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டி மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் ராகுல்காந்தி நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது ரஃபேல் ஒப்பந்த ஊழில் குறித்து ஆவேசமாக பேசிய ராகுல், “உங்களிடன் நான் உறுதியாக சொல்கிறேன். நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்த ஊழல் மீது விசாரணை நடக்கும் என்று தெரிவித்தார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில்  முதலில் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தத்தை மாற்றி ரூ 1600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தெரியும்.

இந்த ஒப்பந்தம் மூலமாக பணத்தை திருடியதே  ‘சவுகிதார்’ என்னும் காவலாளிதான். ஆனால், இதுகுறித்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மறைந்த மனோகர் பரிக்கர் தனக்கு எதுவும் தெரியாது என்றும், இதுகுறித்து,பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார் என்றார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்,  ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறிய ராகுல்காந்தி, அதன்மூலம சவுகிதார் சிறைக்கு செல்வார்… இது உறுதி என்றும் கூறினார்.