டில்லி:
உடல்நிலை காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மருத்துவமனையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசியதை தொடர்ந்து, மருத்துவமனை யில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் பழி வாங்கும் செயல் என்று கண்டனம் செய்யப்பட்டுள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலுபிரசாத் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு கடந்த மாதம் சிறையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகவும், நெஞ்சுவலி காரணமாகவும், மேல் சிகிச்சைகாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்க சிகிச்சை பெற்று வந்த அவரை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து நலம் விசாரித்தார்.
இதைத்தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சரும், பீகார் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
லாலுவுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை எய்ம்ஸில்தான் கிடைக்கும் என்பதால், அவர் வெளியேற மறுத்த நிலையில் அதை மீறி மருத்துவமனையில் இருந்து லாலுவை வெளியேற்றியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாலு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியது அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறினார். மத்திய அரசின் நெருக்குதலால் தான் எய்ம்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.