டில்லி
நேற்று நடந்த ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
நேற்று வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நாளன்று சகோதரிகள் தங்கள் சகோதரனின் கைகளில் ராக்கி என்னும் கயிற்றை கட்டி மகிழ்வார்கள். சகோதரர்கள் தங்களுக்கு ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு இந்நாளில் சகோதரிக்குப் பரிசு அளிப்பது வழக்கமாகும்.
காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வதேரா நேற்று தனது டிவிட்டரில் தானும் தனது சகோதரர் ராகுல் காந்தியும் உள்ள சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அவர் தனது செய்தியில், “ராகுல் காந்தி, எந்த ஒரு மாறுதலும் நமக்குள் நிகழவில்லை என நினைக்கிறேன்…. சரியா?… ராகுல் உலகின் மிகச் சிறந்த சகோதரர்” என பதிந்துள்ளார்.
அவ்ர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஒன்று ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்காவின் கன்னத்தைத் தட்டுவது போல அமைந்துள்ளது.
ராகுல் காந்தி, “நான் எனது சகோதரி கட்டிய ராக்கி தானாக அறுந்து விழுவது வரை கையில் இருந்து கழற்ற மாட்டேன். எனது சகோதரி எனது மிக நெருங்கிய தோழி. நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் இதைப் போல் நெருக்கமாக இருப்போம். இதுவரை நாங்கள் சண்டை இட்டுக் கொண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.