ஜம்மு:
என் குடும்பம் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு சென்றுள்ளார். கடந்த புதன்கிழமை ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்றார்.
காஷ்மீர் பண்டிதர்கள் குழு இன்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள், காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது, காஷ்மீர் பண்டிட்களுக்காக பல நலத்திட்டங்களை அமல் படுத்தியது. தற்போது உள்ள பாஜக எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் கூறினர்.
இதைக் கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி, நான் அவர்களுக்காக ஏதாவது செய்வேன் என்று எனது காஷ்மீர் பண்டிட் சகோதரர்களுக்கு நான் உறுதியளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel