பஞ்சாப்,
நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து மாநில முதல்வராக அம்ரிந்தர்சிங், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 77 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.
ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அகாலிதளம் 15, பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று வரலாறு காணாத தோல்வியை தழுவின. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதி களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால், சட்டமன்ற குழு தலைவராக அம்ரிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அவர், நாளை மறுதினம் (16ந்தேதி) முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.
இதன் காரணமாக அம்ரிந்தர்சிங், அகிலஇந்திய காங்கிரஸ் துணைத்லைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.