டில்லி
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித்ஷா விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்தி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது.
பல மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. உறுதி ஆகி உள்ள்து.
அமித் ஷா இந்த விவரத்தைத் தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.
அத்துடன் தன்னை சந்தித்தவர்கள் அனைவரையும் தனிமைப்ப்டுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “அமித் ஷா விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள்” எனப் பதிந்துள்ளார்.