டில்லி

தூத்துக்குடியில் தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் மொபைல் கடையைக் கடந்த 19 ஆம் தேதி இரவு நேரத்தில் திறந்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  அதற்காக 59 வயதான தந்தை ஜெயராஜ் மற்றும் 31 வயதான மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில் உயிர் இழந்தனர்

அவர்கள் இருவரும் விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்ப்டுகிரது.  பென்னிக்ஸ் நண்பர் ஒருவர் தந்தை மகன் ஆகிய இருவரின் ஆசன வாயில் இருந்தும் ரத்தப் போக்கு ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.   அவர்கள் இருவருக்கும் மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகும் இரத்தப் போக்கு நிற்காததால் 7 லுங்கிகள் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.

தந்தை மகன் மரணம் நாடெங்கும் கடும் அதிர்வை உண்டாக்கி இருக்கிறது.  இதையொட்டி தமிழக முதல்வர் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் எஇவரணத் தொகையும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசுப்பணியும் அளிக்கப்படும் என அறிவித்தார்.  விசாரணையில் தொடர்புடைய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “காவல்துறையினர் கொடுமை ஒரு கொடூர குற்றவியலாகி உள்ளது.  நம்மைக் காக்க வேண்டியவர்களே நமக்கு எதிரிகள் ஆகி உள்ளனர்.  மரணம் அடைந்தோர் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்  இவர்கள் மரணத்துக்குச் சரியான நீதி கிடைக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.