டில்லி

ந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அரசை கொரோனா தடுப்பூசி தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை ஏற்படுவதைத் தடுக்க தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்த வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.  இது குறித்து ராகுல் காந்தி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தனது அறிக்கையில், “ இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடும் பணி எப்போது துவங்கும்? நாட்டில் தற்போது தடுப்பூசி போடும் விகித அளவில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்தால், இந்தாண்டு இறுதிக்குள் 42 சதவீத மக்களுக்குத் தான் தடுப்பூசி போட முடியும்.

கொரோனா 3வது அலையைத் தடுப்பதற்கு 60 சதவீத மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆகவே தினமும் 61 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 7 நாட்களாகச் சராசரியாக 5.8 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதுவும் கடந்த 24 மணி நேரத்தில் 5.7 மில்லியன் டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.