டெல்லி

மோடி அரசு 15 நாட்களில் 10 சம்பவங்கள் நிகழ்த்தி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில்,

”தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 15 நாட்களில் பயங்கரமான ரயில் விபத்து, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை, நீட் தேர்வு ஊழல், நீட் முதுகலை ரத்து, யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டண விலை உயர்வு , காட்டுத்தீ, தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மோடி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதே வேளையில் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க மாட்டோம்.

இதை எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சி அழுத்தம் தருவதை தொடரும். பொறுப்பு ஏற்காமல் பிரதமரை தப்பிக்க விடாது.”

என்று பதிவிட்டுள்ளார்.