டில்லி

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல் காந்தியின் உரையை பலரும் பாராட்டி உள்ளனர்.

நேற்று காலை ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.   போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாராட்டினர்.    அதைத் தொடர்ந்து அவர் தலைவராக தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

ராகுல் தனது உரையில், ”காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களின் நலனுக்காக போராடுகிறது.   ஆனால் பா ஜ க வோ தனக்காக மட்டுமே போராடுகிறது.    பாஜக நம் நாட்டில் மதவாதத்தையும் வெறுப்பு அரசியலையும் பரப்பி வருகிறது.   ஆனால் காங்கிரஸ் அன்பை மட்டுமே முன் வைத்துள்ளது” என ஒப்பிட்டுப் பேசியது பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

மேலும் தனது உரையில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக கட்சியின் எண்ணங்களை நன்கு பிரதிபலித்துள்ளார்.   காங்கிரஸ்  கட்சியில் தனக்கு முன்பிருந்த அனைத்து தலைவர்களின் விருப்பப்படி நாட்டுக்கு தனது உழைப்பை அளிக்க உறுதி பூண்டதை தெரிவித்துள்ளார்.    அவர் பதவி ஏற்கும் முன்பு தன் தாயின் நெற்றியில் முத்தமிட்டு ஆசிகளைப் பெற்றதும் அனைத்து தலைவர்களிடமும் ஆசிகளைப் பெற்றதும் அனைத்து மக்களையும் பாராட்ட வைத்துள்ளது.