டில்லி:

ந்திய பாரளுமன்ற தேர்தல் சூடுபிடித்துவரும் சூழ்நிலையில் நாட்டு மக்களை கவரும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து,தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல அதிரடி திட்டங்களை முன்வைத்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும், நாட்டின் அனைத்துதரப்பு மக்களையும் குறி வைத்தே தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. இது தேர்தல் அறிக்கையை படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக,  வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குஆண்டுக்கு ரூ.72,000/-  வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், ஏழை மக்களுக்கு குறைபட்ச ஊதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 6,000 வழங்கப்படும் என்றார். இந்த திட்டம் உலகின் சில நாடுகளில் மட்டுமே இருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை தமது அரசு உறுதி செய்யும் என்று அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் பொருளாதார நிபுணர்களும் இ்முறையை நடைமுறைப்படுத்த முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுபோல, ஆட்சிக்கு வந்ததும் முதல் நடவடிக்கையாக நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சுயதொழில்முனைவு வேலை இன்மையை நீக்க காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு சொந்த தொழில் தொடங்க தேவையான வசதிகள் அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், இளைஞர்களே, புதிய தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? இந்தியாவுக்கு புதிய வேலைவாய்ப்பை அளிக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கான எங்கள் திட்டங்கள்  என்று சில திட்டங்களை குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,

1. எந்த தொழில் தொடங்கவும் மூன்று ஆண்டுகளுக்கு அனுமதி தேவை இல்லை

2. முழுமையான வரி விலக்கு

3. நீங்கள் உருவாக்கும் வேலை வாய்ப்பை ஒட்டி ஊக்கத் தொகையும் வரி விலக்கும்

4. எளிதான வங்கிக் கடன் வசதி என்றும் அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில தமிழக மக்களின் கோரிக்கையான நீட் தேர்வு நீக்கப்படும் என்றும் மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் முன்னெடுப்புகள் குறித்து பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா வரவேற்பு தெரிவித்து உள்ளத.

காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவினாலும் பா.ஜ.க. தோல்வி பயத்தில் அரண்டு போக வைத்த ராகுலின் பிரச்சாரம் பாராட்டிற்குரியது என்று தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சியின்  புதிய தலைவர் அக்கட்சியை தோல்வியில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

மேலும், தற்போது  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் கருத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.