ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 41வது நாளாக இன்று தொடர்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதால் பயணக்குழுவில் உள்ள கட்சி நிர்வாகிகள் வாக்களிக்க வசதியாக நேற்று ஒய்வு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து யாத்திரையைத் துவங்கிய ராகுல் காந்திக்கு அங்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
திரை பிரபலங்களின் கவர்ச்சி ஆதிக்கத்தில் உள்ள ஆந்திர அரசியலில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றமை பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவருக்கு கிடைத்து வரும் வரவேற்ப்பின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ராகுலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்துவரும் ஆதரவைப் பார்த்து ஆளும் பாஜக வயிற்றெரிச்சலில் பொருமிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பெல்லாரியில் ராகுல் காந்தி தலைமை தாங்கிய காங்கிரஸ் மாநாட்டில் குவிந்த மக்களைப் பார்த்த பின், இதுவரை மக்கள் நலத்திட்டங்களை கேலி பேசிவந்த பாஜக தனது பொருமலை தற்போது இரண்டு சிலிண்டர் இலவச கேஸ்ஸாக ரிலீஸ் செய்திருக்கிறது.