நாகர்கோயிலில் துவங்கிய இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாவது நாள் யாத்திரை மண்டகடல், தக்கலை வழியாக அழகியமண்டபம் சந்திப்பு சென்றடைந்தது.

காலை 7 மணிக்கு துவங்கிய யாத்திரை 16 கி.மீ தூரம் பயணப்பட்டது.

விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் ராகுல் காந்தியை சந்தித்து விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பேசினார்.

விவசாயிகளின் கவலைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்ததார்.

வழியெங்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel