டில்லி:
ஒகி புயல் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஒகி புயல் தாக்குதலில் தமிழகம், கேரளா, லட்சதீவு ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘ஒகி புயலால் பாதித்த தமிழகம், கேரளா, லட்சதீவு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவியதவி அளிக்கும் வகையில் சிறப்பு நிதி தொகுப்பை வழங்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.