
டில்லி
நேற்று திடிரென ராகுல் காந்தி இத்தாலிக்கு பயணம் செய்ததை குறித்து இன்று டிவிட்டரில் பதிந்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தாயும், மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி இத்தாலி நாட்டை சேர்ந்தவர். சோனியாவின் தாய் பவுலோ மெய்னோ இத்தாலியில் வசித்து வருகிறார். அவரைக் காண நேற்று திடீரென ராகுல் காந்தி இத்தாலிக்கு கிளம்பிச் சென்றார்.
இன்று அந்தப் பயணம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். அவர், “எனது பாட்டியம்மாவுக்கு 93 வயதாகிறது. அவர் மிகவும் கருணையானவர். வார இறுதியில் வரும் ஹோலி பண்டிகையன்று அவரை அணைப்பதன் மூலம் அவருக்கு நான் ஒரு ஆச்சரியத்தை தர எண்ணுகிறேன், அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்
[youtube-feed feed=1]