பட்டினம் திட்டா
ராகுல் காந்தி பேசும் போது மலையாளமொழி பெயர்பாளர் குரியன் தடுமாறுவது போல் வந்த வீடியோ போலி வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கடந்த 16 ஆம் தேதி அன்று பட்டணம் திட்டா பகுதியில் ஒரு பேரணியில் கலந்துக் கொண்டார். எந்த ஒரு அரசியல் தலைவரும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் உரையாற்றுவதும் அதை அந்த மாநில மொழியில் மாற்றம் செய்வதும் வழக்கமாகும். அது போல இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுவதை காங்கிரஸ் தலைவர் குரியன் மொழி பெயர்த்தார்.
देखो हंस न देना!
😆 pic.twitter.com/5RHfYDxnKF— RSPrasad Office (@OfficeOfRSP) April 16, 2019
ராகுல் காந்தியின் அந்த பேச்சு ஒரு நகைச்சுவையாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகியது. அதை பலரும் பகிரவே அந்த வீடியோ வைரலானது. அவற்றை பதிந்தவர்களில் பலர் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் கட்சியினர் ஆராய்ந்துள்ளனர். அதற்காக ராகுல் காந்தி பேசிய முழு வீடியோவையும் அவர்கள் ஆய்ந்துள்ளனர்.
[youtube https://www.youtube.com/watch?v=wEycspVAEAQ]
ஒரிஜினல் வீடியோவில் ராகுல் காந்தி, ”மோடி தன்னை பிரதமர் ஆக்க வேண்டாம். காவலர் ஆக்கிவிடுங்கள் என சொல்கிறார்” என கூறி விட்டு அதையே குரியனின் காதிலும் சொல்லவே இருவரும் சிரித்துள்ளனர். ஆனால் இந்த காட்சி எடிட் செய்யப்பட்டு வேறு சில வார்த்தைகள் ஒட்டப்பட்டு சிரிப்பு ஒலிகள் இணைக்கபட்டு வைரலாகும் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
ராகுலின் உரையின் போது குரியன் பலமுறை தவறுதலாக மொழி பெயர்த்துள்ளார் என்பதும் ராகுல் காந்தி பேசுவதை சரியாக கேட்க முடியாமல் தவித்துள்ளார் என்பதும் உண்மையாகும். ஆகையால் அதையே சாக்காக வைத்து இந்த புதிய வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஆராயாமல் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.