டில்லி:

ழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள வெள்ளப்பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிடாதது ஏன்? என்று  ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள  கேரள மாநிலத்துக்குச்  2 முறை நேரில் சென்று, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவிகளும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்,  ‘‘நீங்கள் குருவாயூர் வருகைக்குப் பிறகு  கேரளாவை மிகப்பெரிய வெள்ளம் பாதித்தது. இதில் உயிரிழப்புகளும், பேரழிவும் ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் நீங்கள் வந்து பார்வையிட்டு இருந்தால் பாராட்டு தெரிவித்து இருக்கலாம்’’

பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற  மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதைப் போல ஒரு நிவாரண உதவி வழங்காமல் இருப்பது,  நியாயமற்றது. என்று கூறியுள்ளார்.