ஆமதாபாத்:
‘‘மோடி செய்யும் தவறுகளை சமூக வலை தளங்களில் சுட்டிக்காட்டினாலும் பா.ஜ.க வை போல் பிரதமர் பதவியை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அவமதிக்காது’’ என அக்கட்சி துணைத்தலைவர் ராகுகாந்தி கூறினார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ரா குல் பனஸ்கந்தா பகுதியில் கட்சியின் சமூக வலைதள ஆர்வலர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘‘பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் போது, காங்கிரஸ் எப்போதும் வரையறை வகுத்து செயல்படும். பா.ஜ.க.வை போல் பிரதமர் பதவியை அவமதிக்க மாட்டோம். ஆனால் மோடி முன்பு பிரதமரை அவமதி க்கும் வகையில் தான் பேசினார்.
மோடியின் தவறுகளை சுட்டி காட்ட வேண்டும் அல்லது பா.ஜ.க.வுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும். எப்போதும் பிரதமர் பதவியை அவமதிக்க கூடாது. இது தான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள், நம்மை பற்றி என்ன வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அவர்கள் கூறட்டும். மோடி, பிரதமராக இருப்பதால் நாம் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அவரை விமர்சனம் செய்ய வேண்டும்’’ என்றார்.
ராகுல்காந்தி மேலும் பேசுகையில், ‘‘டுவிட்டரில் அரசியல் ரீதியிலான கருத்தை மட்டுமே பதிவிடுவேன். டுவிட்டரில் நான் பதிவிடும் முன்பு எனது குழுவினருடன் ஆலோசித்து, அவர்களின் கருத்தை கேட்டறிந்து அதை செம்மைப்படுத்தி தான் வெளியிடுவேன். பிரியங்கா காந்தி ஒரு முறை விமானத்தில் சென்றபோது அதில் பயணம் செய்த பாஜக.வினர் 4 பேரும் பயணம் செயதுள்ளனர்.
ஆனால், அவர்கள் ஒரு மணி நேரமாக சிரிக்காமல் கூட உட்கார்ந்து வந்தனர் என்று பிரியங்கா தெரிவித்தார். பா.ஜ.க கூட்டத்தில் இருப்பவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இருக்காது. அனைவரும் இறு க்கத்துடன் காணப்படுவர். எதிர்காலத்தில் பார்க்கும் போது, நாம் மகிழ்ச்சியான நபர்களாக இருப்போம். நாம் தவறுகளை உணர்ந்து கொண்டு தொடர்ந்து செல்வோம்.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மோடி செய்த தவறாகும். தவறு செய்தது அரசியல்வாதியாக இருந்தாலும், சமூக வலை தள பணியாளராக இருந்தாலும் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இது தான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். எனது புகழை அழிக்க பாஜக எவ்வளவு செய்கிறது என்பது பற்றி கவலை இல்லை.
எனக்கு புகழை ஏற்படுத்த பாஜக எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறது என்பதும் முக்கியமல்ல. நான் உண்மையானவன். அனைவருக்கும் உண்மையானவனாக இருப்பேன். குஜராத்தில் எங்கு சென்றாலும் ம க்கள் லஞ்சம் குறித்து புகார் கூறுகின்றனர். சூரத்தில் சிறிய வர்த்தகர்கள் கூட இது குறித்து புகார் கூறுகின்றனர். ஆனால், மோடி இங்கு ஊழல் இல்லை என்கிறார்’’ என்றார்.