புதுடெல்லி:
மக்களுடன் தொடர்பை வலுப்படுத்த ராகுல் காந்தி பாதயாத்திரை செல்ல வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ஆலோசனை வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி 52 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து, 3 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபை உறுப்பினருமான அபிஷேக் சங்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தி ராஜினாமா செய்ய தேவையில்லை.
90 முதல் 180 நாட்களுக்கு ரயில் மற்றும் பாதயாத்திரை சென்று மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
காங்கிரஸில் மாற்றங்களை செய்ய வேண்டும். முக்கிய பதவிகளில் நியமிக்கப்படும் போது வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.