டில்லி

மேதி தொகுதிக்குக் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஐந்து லாரிகளில் அரிசி, கோதுமை பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை அனுப்பி உள்ளார்

வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வந்தார்.  நடந்து முடிந்த தேர்தலில் அவர் அந்த தொகுதியில் தோல்வி அடைந்தார்.  இப்போது ராகுல் காந்தி கேரள மாநில வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளார்.

 தன்னை தோற்கடித்த போதிலும் ராகுல் காந்திக்கு அமேதி மக்கள் மீது உள்ள பாசம் குறையாமல் உள்ளது.  அது இப்போது வெளியாகி உள்ளது.  கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கு வாடி வருகின்றனர்.  அவ்வகையில் அமேதி தொகுதி மக்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அவர்களுக்கு உதவ அமேதி தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி 5 லாரிகளில், அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள் என உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்துள்ளார்.  அவற்றை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனில சிங் பல்வேறு கிராம மக்களுக்கு வழங்கி உள்ளார்.

அத்துடன் ராகுல் சார்பில் தொகுதி மக்களுக்கு 50,000 முக கவசங்கள், 20,000 கிருமி நாசினி பாட்டில்கள், 20,000 சோப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.