புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டோல்கேட்கள்(சுங்கச் சாவடிகள்), ஏப்ரல் 20ம் தேதி முதல் இயங்கும் என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் கால தாமதத்தை தடுக்க, டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் 25ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், வரும் 20ம் தேதி (திங்கள்) முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும், கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மே மாதம் 3ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை, ஏப்ரல் 20 முதல் தேவைப்படும் இடங்களில் தளர்த்துவதற்கு உத்தரவிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நாடே அவதியுறுகையில், டோல்கேட்களை இவ்வளவு விரைவாக வசூலுக்கு அனுமதிப்பதன் அவசரத் தேவை என்ன? இது யாருக்கான உத்தரவு? என்று மோடி அரசை கடுமையாக விமர்சிக்கின்றனர் பல சமூக ஆர்வலர்கள்.