டில்லி

ன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இன்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பிய வண்ணம் உள்ளனர்.   முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் அவரை “கட்சியின் டார்லிங் (செல்லம்)” எனக் குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும்,  மு க ஸ்டாலின் உட்பட பல தோழமைக் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளனர்.  ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா உட்பட அரசியல் சார்பற்ற பலரும் அவருக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பி உள்ளார்.