டெல்லி
பிரதமர் மோடியின் கையில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி நழுவி விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்
இன்று நாடாளுமன்றத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அடுத்தடுத்த கட்ட தேர்தலைச் சந்திக்கும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்,
”இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்கள் மாதந்தோறும் ரூ.8,500 பெறுவார்கள். இளைஞர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 30 லட்சம் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறும். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்படும். இந்தியர்களின் ஒரு அரசைக் காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளைக் காங்கிரஸ் உருவாக்கும்.
ஆனால் அதானியின் அரசு, நாட்டின் வளங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களின் பாக்கெட்டை சென்றடையும், தொழிலதிபர்களிடம் நன்கொடை வசூலிக்கும் கும்பல், அரசியல் சாசனமும், ஜனநாயகமும் அழிந்து விடும், விவசாயிகளுக்கு நிதி நெருக்கடி ஆகியவைதான் மோடியின் உத்தரவாதம் ஆகும்.
இந்தியாவில் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளைக் காங்கிரஸ் உருவாக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.எனவே இரண்டு வாக்குறுதிகளுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாக உள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரதமரின் கையில் இருந்து நழுவி விட்டது. இது அவருக்கும் தெரியும்”
என்று பதிந்துள்ளார்.