டெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்கலவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,
”மக்களவையில் எனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை சபை “ஜனநாயகமற்ற” முறையில் நடத்தப்படுகிறது சபாநாயகர் என்னைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததார். ஆனால்,நான் பேச வாய்ப்பளிக்காமல் சபையை ஒத்திவைத்தார். மேலும் இதேபோல கடந்த வாரத்திலும் எனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது”
என்று கூறினார்.
ராகுல் காந்தி இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்த உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் இவ்வாறி சொல்ல என்ன காரணம் என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மக்களவை சபாநாயகரை மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மக்களவையில் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உட்பட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், சந்தித்து, அவையில் ராகுல் காந்தி பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.