டில்லி
குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகளால் தான் ஏமாற்றம் அடையவில்லை என காங் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலத் தேர்தலில் பா ஜ க வெற்றி வாய்ப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இமாசலப் பிரதேசத்தை இழந்த போதிலும் குஜராத் மாநிலத்தில் கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்பை நோக்கி காங்கிரஸ் நடை போட்டு வருகிறது. இது குறித்து தனது கட்சி உறுப்பினர்களுடன் இன்று ராகுல் காந்தி இது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
அப்போது அவர் தேர்தல் முடிவுகளால் தாம் எந்த வித ஏமாற்றமும் அடையவில்லை எனவும் எப்போதும் போல தைரியமாக உள்ளதாகவும் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. ராகுல் காந்தி குஜராத்தில் அதிக கவனம் செலுத்தியதும் அங்கு அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டியதும் குறிப்பிடத்தக்கது ஆகும். ராகுல் காந்தியின் இந்த பெருந்தன்மையான கருத்து அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரத்தில், செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி ”வெற்றி பெற்றவனே வீரன். ஒவ்வொரு பாஜக ஊழியரின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது” எனக் கூறி உள்ளார்.