மங்களூர்
காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் – பாஜக இரு கட்சிகளும் பிரசாரக்களத்தில் இறங்கி உள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைத்தாலும் தொங்கு சட்டசபை அமையும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இன்று மங்களூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அப்போது அவர், “இந்த தேர்தல் அறிக்கை வீரப்ப மொய்லி உள்ளிட்ட மூத்த தலைவர்களால் தயாரிக்கப்பட்டதாகும் நாடெங்கும் உள்ள மக்களின் கருத்துக்களைக் கேட்ட பின் இந்த அறிக்க்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதம மாதிரி தனது கருத்துக்களை மனதின் குரல் என கூறி வருகிறார். ஆனால் இந்த தேர்தல் அறிக்கைதான் மக்களுடைய மனதின் குரல் என நான் சொல்வேன்.
இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் காங்கிரஸ் நிறைவேற்றும் என உறுதி கூறுகிறேன். மோடி ரூ.15 லட்சம் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து பிறகு அதை நிறைவேற்றாத மோடியைப் போல காங்கிரஸ் நடந்துக் கொள்ளாது.” என கூறி உள்ளார்.