டில்லி
கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா உள்ளிட்ட பலநாடுகளில் தடுப்பூசிகள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன. தற்போது கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு மிக அவசியத் தேவையாக உள்ளது. ஆனால் பாஜக அமைச்சர்கள் கருத்தும் அரசு அதிகாரிகள் கருத்தும் மக்களை குழப்புவதாக உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி,
“பிரதமர் –அனவருக்கும் கொரோனா தடுப்பூசி வழக்கப்படும்
பீகார் தேர்தலில் பாஜக – பீகாரில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும்
தற்போது இந்திய அரசு – அரசு அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கப்படும் என சொல்லவில்லை.
உண்மையில் பிரதமரின் முடிவுதான் என்ன?”
என கேள்வி எழுப்பி உள்ளார்.