பெங்களூரு:

கர்நாடகாவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள், -மாட்டு வண்டியில் சென்று மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது கோலாரில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘உலகளவில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பது ஏன்?. மத்திய அரசு பாமர மக்களிடம் இருந்து பணத்தை பறித்து தனது பணக்கார நண்பர்களுக்கு கொடுக்க விரும்புகிறது. அதற்காக பாமர மக்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு.

பெட்ரோல், டீசலை ஏன் ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை?. இரு சக்கர வாகனங்கள், லாரி, -பஸ் மற்றும் வாகனம் ஓட்டுனர்கள் சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து தனது பணக்கார நண்பர்களுக்கு கொடுக்கிறது’’ என்றார்.