உத்தரபிரதேசம்:
உக்ரைனில் சிக்கியுள்ள நமது இளைஞர்களை மீட்காமல், அங்குள்ள கல்லூரிகளில் ஏன் படிக்கசென்றீர்கள் என பாஜகவினர் கேட்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நான் இறப்பேனே தவிர 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்துவேன் என ஒரு போதும் பொய் சொல்லமாட்டேன் என்றார். மேலும், பிரதமர் இந்து மதத்தை பாதுகாப்பதாக கூறுகிறார். ஆனால் அவர் பொய்களை தான் பாதுகாக்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel