நாகர்கோவில்: பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை இன்று மாலை தொடங்கும் ராகுல்காந்தி, முன்னதாக, குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தார். காந்தி மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் உடன் சென்று மரியாதை செய்ததுடன், அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டார்.
இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒற்றுமை யாத்திரை மற்றும் கட்சியைப் பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார்.அதன்படி குமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் இந்த நடைபயணம் மேற்காள் கிறார். 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவிற்கு இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து இன்று மாலை புறப்படும் இந்த நடைப்பயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாகக் காஷ்மீரைச் சென்றடைகிறது.
முன்னதாக, இன்று காலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் நினைவு மண்டத்துக்கு சென்று மரியாதை செய்த ராகுல், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தற்போது கன்னியாகுமரி வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து, மாலை 4 மணி அளிவில் அவர் நடைபயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
முன்னதாக, நடைபயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி வரவேற்றார். முதல்வரும், ராகுல் காந்தியும் இணைந்து காந்தி மண்டபத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி படகு துறையில் இருந்து அவர் தனிப்படகில் சென்றார். கடலுக்குள் இருக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். இந்த பயணத்தின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை எம்எல்ஏ மற்றும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிடோர் இருந்தனர்.