கவுகாத்தி: தருண் கோகோய் மறைவை அடுத்து, கவுகாத்தி சென்று அவரது மனைவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோய் திங்கட்கிழமை காலமானார். கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பாதிப்பு காரணமாக அவர் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவருக்கு டோலி என்ற மனைவியும், சந்திரிமா என்ற மகளும், கௌரவ் கோகோய் என்ற மகனும் உள்ளனா். மருத்துவமனையில் இருந்து அவரது உடலை அவரது மகனும், எம்.பி.யுமான கௌரவ் கோகோய் பெற்றுக் கொண்டார்.
கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உடலை மருத்துவமனையில் இருந்து கௌரவ் கோகோய், அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவா் ரூபின் போரா, எதிர்கட்சி தலைவா் தேவப்பிரத சைக்கியா, மூத்த தலைவா்கள் பிரத்யூத் போர்டோலாய், ரகிபுல் ஹுசைன் ஆகியோர் தோளில் சுமந்து வர நூற்றுக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்தனர்.
ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு திஸ்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பொதுமக்களும் தருண் கோகோயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.
தருண் கோகோய் மறைவை அறிந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கவுகாத்தி சென்றார். அங்கு கோகோயின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது:
தருண் கோகோய் தமக்கு குருவாக, ஆசிரியராக இருந்தார். அசாம் பற்றி எனக்கு விளக்கி கூறியவர். தனிப்படை முறையில் அவரது மறைவு எனக்கு பெரும் இழப்பு என்று கூறினார்.