இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.
“இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் அப்போது விவாதித்தனர்” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஐந்து நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று கிறிஸ்டோபரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு ஆகியவற்றில் மேம்பட்ட கூட்டாண்மை உட்பட பல்வேறு விஷயங்களில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதேவேளையில், நியூசிலாந்தில் நடைபெறும் காலிஸ்தானி ஆதரவு நடவடிக்கைகள் குறித்தும் லக்சனிடம் இந்தியா கவலை தெரிவித்திருந்தது.