சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியில் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபையில் அவரது வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் ஒய்.டபிள்யூ.சி.ஏ. மைதானத்தில் இன்று நடக்கும் விழாவில் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்தார். இதையடுத்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

அவரை ஸ்டாலின் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.
அவருடன் மாநில காங்கிஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார். இதன் பின்னர் ராகுல்காந்திக்கு ஸ்டாலின் தேனீர் விருந்தளித்தார்.
Patrikai.com official YouTube Channel