டெல்லி

ன்றைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளால் மக்களவையே அலறி உள்ளது.

இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பங்கேற்று மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று மக்களவையில் எழுப்பினார்.

மேலும் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசியபோது மைக் அணைக்கப்பட்டது என பல்வேறு விவகாரங்களை மையப்படுத்தி மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக் கணைகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை பதில் அளித்துள்ளார். இன்று மக்களவையில், பதிலளித்த பிரதமர் மோடி, அரசமைப்பு என்ன சொல்கிறேதா அதன்படி நடக்கிறேன் என்று மக்களவையில் ராகுல் காந்தி பேச்சுக்கு இடையே 2வது முறையாக எழுந்து பிரதமர் மோடி பதில் அளித்தார்.

முன்னதாக பேசிய ராகுல் காந்தி, நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து தான் பேசியிருக்கிறார்கள். ஆனால் இங்கே ஹிந்துகள் என்று கூறிக்கொள்ளும் சிலரோ, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்துத்தான் பேசுகிறார்கள். பாஜகவினர் உண்மையான ஹிந்துக்கள் அல்லர் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்துக்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமையடையும் கோடானு கோடி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, மக்களவையில் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனை அடுத்து தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, அக்னிவீரர் திட்டத்தில் பணியாற்றும் ஒரு வீரர் பலியானால், அவரது மரணத்தை வீர மரணமாக இந்த அரசு ஏற்காது. ஒரே ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரருக்கு அதிகப்படியான சலுகை கிடைக்கும், மற்றவருக்குக் கிடைக்காது என்றால் அது ராணுவத்துக்குள் பிளவை ஏற்படுத்தும். அக்னிவீரர் திட்டத்தில் சேர்ந்து பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது, பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் திட்டமே அக்னிவீரர்கள் திட்டம்,  இதில் பணியாற்றும் வீரர்களுக்கு முறைப்படியான பயிற்சி அளிக்கப்படாது. இவர்கள் தான் 5 ஆண்டுகள் பயிற்சி பெற்ற சீன வீரர்களுடன் மோதுவார்கள் என்றும் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் குறுக்கிட்டு பதிலளித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி தவறான விவரம் கூறுகிறார். அக்னிவீரர் திட்டத்தில் உயிரிழிந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி தரப்படுகிறது என்றும் விளக்கம் கொடுத்தார். பின்னர் அயோத்தி கோயில் குறித்து பேசிய ராகுல் காந்தி, அயோத்தி கோயில் பாஜகவுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளது. அயோத்தி விமான நிலையம் கட்டப்பட்ட இடம் வலுகட்டாயமாக கையகப்படுத்தப்பட்டது. அயோத்தி ஜென்மபூமி விழாவில் மக்கள் இல்லை. அம்பானியும், அதானியும்தான் இருந்தனர். பொதுமக்களுக்கு அழைப்பும் இல்லை, அவர்கள் வரவும் இல்லை. அயோத்தி அமைந்துள்ள தொகுதியிபின்னர் அயோத்தி கோயில் குறித்து பேசிய ராகுல் காந்தி, அயோத்தி கோயில் பாஜகவுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளது. அயோத்தி விமான நிலையம் கட்டப்பட்ட இடம் வலுகட்டாயமாக கையகப்படுத்தப்பட்டது. அயோத்தி ஜென்மபூமி விழாவில் மக்கள் இல்லை. அம்பானியும், அதானியும்தான் இருந்தனர். பொதுமக்களுக்கு அழைப்பும் இல்லை, அவர்கள் வரவும் இல்லை. அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட பிரதமர் இரு முறை முயற்சித்தார். ஆனால், கணிப்பாளர்கள் வேண்டாம் என மோடியிடம் தெரிவித்துவிட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் கொள்கைகளாலும், அரசியலாலும் மணிப்பூரை எரித்துவிட்டனர். உள்நாட்டு போராக மாற்றியுள்ளனர். இதுவரை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ல் போட்டியிட பிரதமர் இரு முறை முயற்சித்தார். ஆனால், கணிப்பாளர்கள் வேண்டாம் என மோடியிடம் தெரிவித்துவிட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் கொள்கைகளாலும், அரசியலாலும் மணிப்பூரை எரித்துவிட்டனர். உள்நாட்டு போராக மாற்றியுள்ளனர். இதுவரை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.