புவனேஷ்வர்:
ஒடிசாவில் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உத்தரவாத அட்டை வழங்கும் நிகழ்வை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
புவனேஷ்வரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
அதனை நினைவுகூறும் வகையில்தான், உத்தரவாத அட்டை வழங்கி தொடங்கி வைத்துள்ளேன். உங்கள் அனைவரது தேவையையும் நான் அறிவேன் என்றார்,
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்தார்.
இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.