குஜராத் நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டனைக்கு தகுந்த காரணம் கூறவில்லை என்று கூறி ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு ஆகஸ்ட் 4 ம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதனையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அவரது எம்.பி. பதவிப்பறிப்பை உடனடியாக ரத்து செய்து மக்களவை செயலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.