விருதுநகர்:

இன்று நடைபெறும்திமுக தென் மண்டல மாநாடு, பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கப்புள்ளி என்றும், ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்றும்,  திமுக சார்பில் நடைபெறும் தென் மண்டல மாநாட்டில் மக்கள் வெள்ளத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் அருகே பட்டம்புதூரில், திமுக தென்மண்டல மாநாடு இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்,  திமுக தலைமை கழக நிர்வாகிகள்,  கனிமொழி, தயாநிதிமாறன் மற்றும் அனைத்து மாவட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

தென்மாட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள்  காலை முதலே விருதுநரை முற்றுகையிட்டு வருகின்றனர். விருதுநகரே விழாக்கோலம் பூண்டு, எங்கு நோக்கிலும் மக்கள் தலைகளாக காட்சி அளிக்கிறது.

‘இறையன்பன் குத்தூஸ்’ இசை நிகழ்ச்சியுடன் மாலை 4 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போகும் வரலாறு மீண்டும் நடக்கப்போகிறது என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  இந்த மாநாடு,  தமிழகத்தின் அவல நிலைக்கு திமுக முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், அதற்கான தொடக்கம் தான் இந்த மாபெரும் விருதுநகர் மாநாடு என கூறினார். மேலும்,  தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கும் மத்தியில் பாஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்  அதற்கு  ஒரு தொடக்கப்புள்ளி தான் விருதுநகர் மாநாடு என்றும், திமுக கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போகும் வரலாறு மீண்டும் நடக்கப்போகிறது என்றும் ஸ்டாலின் பேசினார்.

காங்கிரஸ் கட்சியுடன் இந்திரா காந்தி காலம் முதல் கூட்டணி வைத்துள்ள எங்களைப் பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லும் பிரதமர் மோடி வைத்திருக்கும் கூட்டணி என்ன விதமான கூட்டணி?   ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பார் என்று ஓபிஎஸ் கூறியது மிகப்பெரிய பொய், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட்டணி வைத்திருக்க மாட்டார் என ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வருகிறது. மீண்டும் நாம் 40க்கு 40 இடங்களை  பெறுவோம். நாம் விரும்பும்,  நாம் சொல்லும் நபர்தான் பிரதமராக வருவார். அதுவும் ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.