rahul gandhi in US

டில்லி:
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி 15 நாள் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர்பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.

அப்போது அவர் பேசும் போது, ‘இந்தியாவில் அமைதியும், சமூகநல்லிணக்கமும் கடும் சவால் களைசந்தித்து வருகின்றன. பிரிவினை வாதசக்திகள் இந்தியாவின் அமைதிக்கும், சமூகநல்லிணக்கத்துக்கும் தீங்குவிளைவித்து வருகின்றன’ என பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீது மறை முகமாக குற்றம்சாட்டினார்.

மேலும், ‘இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருநாளும் புதிதாக வேலை தேடும் 30,000 பேரில் 450 பேருக்கேவேலை கிடைத்துவருகிறது. சரியான வேலை வாய்ப்பை அளிக்காமல் இளைஞர்களுக்கு தெளிவான முன்னேற்றப்பாதையை அமைத்துக்கொடுக்க முடியாது.

வேலைவாய்ப்பை உருவாக்கிதருவதில் பா.ஜ.க. அரசு தோற்று விட்டது. சிறு தொழில் களைஊக்கு விக்கும்வகையிலான முயற்சிகளைமத்திய அரசுஎடுக்க வேண்டும்’ எனவும் ராகுல் வலியுறுத்தினார்.