ஈரோடு,

டில்லியில் உள்ள இந்திய பாராளுமன்றத்துக்கு வெளியே போட்டி நாடாளுமன்ற கூட்டம் நடத்தி இந்திய விவசாயிகள் குழு முடிவு செய்துள்ளது.

மோடி தலைமையிலான மத்தியஅரசு விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறது. அதன் காரணமாக விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி டில்லி ஜந்தர் மந்திரில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில்,விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அளவில் விவசாயிகள் ஒன்றிணைந்து உள்ளனர்.

இந்த விவசாயிகள் நாடு முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் தற்போது ஈரோடு வந்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது, அடுத்த மாதம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே விவசாயிகள் சார்பாக போட்டிக்கூட்டம் நடத்த முடிவெடித்து உள்ளளோம்.

அந்த கூட்டத்தில், வேளாண் விளைப் பொருட்களுக்கு உரியவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி பேச உள்ளோம் என்று கூறினர்.