புதுடெல்லி:
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, மூன்று சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
முன்னதாக, விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்துக் கண்காணிக்கவில்லை என்றும் அதனால் இழப்பீடு குறித்த கேள்வி எழவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் கூறியதை அடுத்து ராகுல் காந்தி இன்று ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இறந்த விவசாயிகளின் விவரங்கள் உங்களிடம் இல்லை என்று சொன்னீர்கள். அதற்கான விவரங்கள் இத்துடன் அவைக்கு சமர்ப்பித்து உள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியும், வேலையும் தருமாறு கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel