டில்லி
வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி

வயநாடு மக்களுக்கு உணவு வழங்க 500 கிலோ அரசியை அந்த தொகுதி எம்பி ராகுல் காந்தி வழங்கி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
பாதிப்படைந்தோர் எண்ணிக்கையில் கேரளா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இங்கு ஆதரவற்றோருக்குச் சமுதாய சமையல் கூடங்களில் உணவு சமைத்து அளிக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ஆவார்.
இவர் வயநாடு தொகுதியில் உள்ள சமுதாய சமையல் கூடங்களுக்கு 500 கிலோ அரிசி அளித்துள்ளார்.
இந்த அரிசி இங்குள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel