புதுடெல்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் ‘பந்த்’) ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் ரயில் சேவை பாதிப்பட்டுள்ளது. விவசாயிகளின் பாரத் ‘பந்த்’ க்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு கொடுத்துள்ளார்.
தற்போது மேற்கு வங்கத்திலும், அசாமில் சட்டமன்ற தேர்தல் நடைபெற நிலையில் அங்கு சென்ற விவசாயிகள் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடடனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய பாரத் ‘பந்த்’தில் ஈடுபட போவதாகவும், மக்கள் இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தினார். இந்த நிலையில் நாடு முழுவதும் விவசாயிகள் பாரத் ‘பந்த்’ போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் பாரத் ‘பந்த்’ க்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆதரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கொடுமைகள், அநீதிகள் மற்றும் ஆணவங்களுக்கு சத்தியாக்கிரகம் முடிவு கட்டும் என்பதற்கு இந்திய வரலாறு ஒரு சாட்சி. இந்த இயக்கம் நாட்டின் நலனுக்காக அமைதியாக இருக்கட்டும்
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.