பட்ஜெட் ஆலோசனை என்பது கோடீஸ்வர நண்பர்களுக்காக: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Must read

டெல்லி: நிதிநிலை அறிக்கை குறித்து பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனை எல்லாம் கோடீஸ்வர நண்பர்களுக்காக என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

நாட்டின் நிதிநிலை அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறார். ஆனால் இது குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பட்ஜெட் தயாரிப்பது குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைகள் எல்லாம் அவரது கோடீஸ்வர நண்பர்களுக்காகத்தான். விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு அல்ல.

விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் கருத்துகளையோ, குரல்களையோ கேட்க பிரதமர் மோடிக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தொடா்பாக, பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களை பிரதமா் மோடி பல கட்டங்களாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னணி தொழிலதிபர்களை சந்தித்துள்ளார்.  இதை பார்த்துதான் ராகுல் காந்தி இந்த விமர்சனத்தை வெளியிட்டு உள்ளார்.

11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக பொருளாதார வளா்ச்சி சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில், நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன், வரும் 1 ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

 

More articles

Latest article