டில்லி

நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகின.   அதன் அடிப்படையில் அங்குப் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.  பிறகு அவர்கள் அப்பாவி பொதுமக்கள் எனத் தெரிய வந்ததால் அங்கு கடும் கலவரம் வெடித்தது.

மக்கள் ஒன்று கூடி மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வரும் நிலையில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடந்து வாகனங்கள் தீக்கிரையாகின.  இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாகாலாந்து முதல்வர் நெபியு ரியோவிடம் கேட்டறிந்துள்ளார்.   நடந்த சம்பவங்களுக்கு முதல்வர் நெபியு ரியோ மக்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில்,

“நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது இதயத்தை நெருடுகின்றது.  நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை மேலும் பாதுகாப்புப் படையும் பாதுகாப்பாக இல்லை.  இந்நிலையில் உள்துறை என்ன செய்கிறது?  இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்”

எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.