பூரி

ஜாவேத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது.

அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையை அடைந்தது.   பிறகு அது ஜாவேத் புயலாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜாவேத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.   ஜாவேத் புயல் ஒடிசா மாநிலம் பூரிக்கு தெற்கே பாரதி 50 கிமீ மற்றும் துறைமுகத்தில் இருந்து தென்மேற்கே 100 கிமீ தொலைவில் தற்போது உள்ளது.   வலுவிழந்த நிலையில் அது வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர உள்ளது.

பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு நிலையாக மேலும் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அதன் பிறகு அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வங்க கடலோரம் செல்லலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.