நெல்லை: பாளையங்கோட்டையில், கேள்வி எழுப்பும் போது மைக் அணைந்து விட அதை நாடாளுமன்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நெல்லையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேராசிரியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த வண்ணம் இருந்தார்.
சிறுவன் ஒருவனுடன் மேடையில் சிறுநடை ஒன்றும் அவர் போட்டார். அப்போது, பேராசிரியர் ஒருவர் கேள்வி எழுப்ப முயன்றார். ஆனால் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது கையில் இருந்த மைக் வேலை செய்யவில்லை.
அதில் இருந்து சப்தம் வராததால் அவர் என்ன கேட்டார் என்பது யாருக்கும் தெளிவாக புரியவில்லை. அப்போது குறிப்பிட்ட ராகுல் காந்தி, மைக் ஆப் ஆன நிகழ்வை நாடாளுமன்ற நடவடிக்கையுடன் ஒப்பிட்டு பேசினார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் போது, இதுபோன்று தான் மைக் அணைக்கப்படும் என்று உவமையாக பேச, அவரது கருத்துக்கு அந்த அரங்கில் சிரிப்பலை எழுந்தது.